Marriage

Kalki's articles on marriage and lovelife of transsexual people

front page

Mail

Sahodari Foundation

சகோதரி அமைப்பு வலைத்தளம்

Like Sahodari Foundation on Facebook!

Sahodari On Facebook!


English Page

Thirunangai.netThirunangai.com

திருநங்கை என்றால் மரியாதைக்குரிய பெண் என்ற அர்த்தமாகும். மாற்றுப்பாலினப்பெண் என்றும் அரவானி என்றும் அழைக்கப்படுகிற திருநங்கைகளின் வாழ்க்கை பெரும்பாலும் அன்பற்ற ஒரு வாழ்க்கையாகும். தனக்கென ஒரு துணை, தன் மீது அன்பு செலுத்துவதற்கும் தன் வாழக்கையில் கடைசிவரை தன்னோடு துணையாக இருந்து தோள்கொடுக்க கடைசிவரை யாரும் அவரகளுக்கு இல்லை. உண்மையான காதலும் பாசமும் சிலருக்கே அமைகிறது.ஒருஆணுடனான திருநங்கையின் காதல் வாழ்க்கை நிலையற்ற ஒரு தற்காலிக பந்தமாய்தான் அமைகிறது.

திருநங்கைகளை தங்களின் பாலியல்தேவைகளுக்காக பயன்படுத்திக்கொள்ளும் ஆண் சமூகம், அவர்களுக்கு மனைவி என்ற அந்தஸ்தை ஏன் தரக்கூடாது? திருநங்கைகளும் பெண்கள்தானே! மற்ற பெண்களைப்போல இயல்பான வாழ்க்கை வாழத்தான் பெரும்பாலான திருநங்கைகள் ஆசைப்படுகிறார்கள்.

திருநங்கைகளை வாழ்க்கை துணையாக ஏற்றுக்கொள்ள ஆண்கள் முன்வரவேண்டும். அதற்காகத்தான் இந்த திருநங்கை திருமண வலைத்தளம். திருநங்கைகளை திருமணம் செய்துகொள்ள விரும்பும் ஆண்கள் இந்த வலைத்தளத்தில் பதிவு செய்துகொள்ளவேண்டும். ஒரு திருநங்கையை உலகறிய மனைவியாக ஏற்றுக்கொண்டு வாழ நீங்கள் தயாரெனில் எங்களோடு தொடர்புகொள்ளுங்கள். உங்களின் பாலியல்தேவைகளுக்காக மட்டுமே திருநங்கைகளை பயன்படுத்தலாம் என்று நீங்கள் கருதினால தயவுசெய்து இத்தளத்திலிருந்து வெளியேறிவிடவும்.

நல்ல நோக்கத்துடன் தொடங்கப்பட்டுள்ள இத்திட்டத்தின் மூலம் திருநங்கைகளுக்கு நல்வாழ்வு கிடைக்கும் என்று நம்புகிறேன். ஒரு திருநங்கைக்காவது உலகறிய திருமணம் நடந்தால் அதுவே இத்தளத்தின் வெற்றி. திருநங்கைகளின் சமூக அந்தஸ்திற்கும், நல்வாழ்வுக்கும் ஒரு சமூகப்புரட்சியாக, ஒரு வித்தாக இத்திட்டம் அமையும் என்று நம்புகிறேன், திருநங்கைகளை ஆண்கள் திருமணம் செய்வது பற்றிய உங்கள் கருத்துக்களை எங்களுக்கு எழுதி அனுப்புங்கள்.

ஒரு திருநங்கைக்கு வாழ்வு தர தயாராக இருக்கும் புரட்சிகரமான நல்ல மனமுள்ள வீர ஆண்மகன் நீங்கள் எனில் உடனடியாக எங்களுக்கு எழுதுங்கள். உங்களைப்பற்றிய தகவல்களுடன் உங்கள் கைபேசி எண்களையும் குறிப்பிடுங்கள்.

Kalki Subrmaniam

- திருநங்கை கல்கி -

உங்களைப்பற்றி:

Powered by thesitewizard.com
 

முதல் பக்கம்
 
சகோதரி அமைப்பு